செய்திகள்

கொழும்பு குப்பைக்கு தற்காலிக தீர்வு..

கொழும்பு நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் இன்று முதல் புத்தளம் அருவக்காடு கழிவகற்றல் தொகுதியில் கொட்டப்படவுள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அருவக்காடு கழிவகற்றல் தொகுதியில் குப்பைகைள கொட்டுவதற்கு, மாதாந்தம் 2.5 மில்லியன் ரூபா கொடுப்பனவை வணாத்திவில்லு பிரதேச சபை கோரியிருந்ததாக கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

அந்த கொடுப்பனவை வழங்குவதற்கு கொழும்பு மாநகர சபையின், கழிவகற்றும் ஒப்பந்த நிறுவனத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டதை அடுத்து, இன்று முதல் அருவக்காட்டில் குப்பைகள் கொட்டப்படவுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நாளாந்தம் சுமார் 550 மெட்ரிக் தொன் குப்பைகள் சேகரிக்கப்படுவதுடன், அதில் 200 மெட்ரிக் தொன் குப்பைகள் உக்காத குப்பைளாக காணப்படுகின்றன

அருவக்காடு கழிவகற்றல் தொகுதியில் நாளொன்றுக்கு 600 மெட்ரிக் தொன் குப்பைகைள கொட்டுவதற்காக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button