செய்திகள்

கொழும்பு- கொச்சிக்கடை அருள்மிகு பொன்னம்பலவாணேஸ்வரர் திருக்கோயில் ..

அருள் பொழிந்து வாழ்வளிக்கும் அருட் பிளம்பே சிவனே
அமைதியெங்கும் நிலை பெறவே வழியமைப்பாய் ஐயா
கேட்கும் வரம் தயங்காமல் தந்தருளும் சிவனே
குவலயத்தில் நிம்மதியை நிறுவிடுவாய் ஐயா
சிவகாமி அம்பாளுடனுறையும் சிவனே
சித்தம் நித்தம் சீரடைய உன்னருளைத் தருவாய்
கருங்கல்லால் கோயில் கொண்ட கருணை வள்ளல் சிவனே
காத்து, துணையிருந்து அணைத்தருள்வாய் ஐயா
பொன்னம்பலவாணேஸ்வரர் என்ற பெயர் கொண்ட சிவனே
பெருமைமிகு நல்வாழ்வை நமக்களிப்பாய் ஐயா
கொழும்பு மாநகரினிலே கோயில் கொண்ட சிவனே
கொடிய பகை, கொடுமைகளை அழித்திடுவாய் ஐயா
பத்து நாள் திருவிழா காணுகின்ற சிவனே
மேன்மை கொண்ட, தலை நிமிர்ந்த வாழ்வதனைத் தருவாய் ஐயா
ஆதிசிவன் நீயென்ற பெருமை கொண்ட சிவனே
ஆதரித்து அருளளித்து அணைத்தருள்வாய் ஐயா
பங்குனி உத்தரத்தில் தேரேறி வரும் சிவனே
நம்பழம் பெருமை வெளிப்படவே அருளிடுவாய் ஐயா
தமிழ் மொழியைத் தரணிக்குத் தந்திட்ட சிவனே
எம் மொழியை வளப்படுத்தி ஒளிர்ந்திடவே வழிசெய்வாய் ஐயா 
மேற்கிலங்கை கடலருகே வீற்றிருக்கும் சிவனே
நாம் மேன்மையுடன் ஒன்றுபட வழியமைப்பாய் ஐயா
உள்ளமதில் உனையிருத்திப் போற்றுகின்றோம் சிவனே
கலக்கமில்லா எதிர்காலம் உறுதிசெய்வாய் ஐயா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen