...
செய்திகள்

கொழும்பு- கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர் திருக்கோயில்…

கொழும்பு மாநகர் தனிலே அருள் வழங்கும் பெருமானே
கொடுமை களைந்து எம்மை காவல் செய்வாய் ஐங்கரனே
துன்பம் துடைத்தெறிந்து துணையிருக்கும் பெருமானே
தூய நல்ல வாழ்விற்கு  வழிதருவாய் ஐங்கரனே
கொட்டாஞ்சேனை திருவிடத்தில் கோயில் கொண்ட பெருமானே
கிட்டிவந்து அருள் தருவாய் மூத்தவனே ஐங்கரனே
இன்பம் தந்தெம்மை உயர்த்திவிடும் பெருமானே
இனிதெம்மை உடனிருந்து காத்தருள்வாய் ஐங்கரனே
அச்சம் அகற்றி எமக்கருள் நல்கும் பெருமானே
அருகிருந்து காவல்செய்து வளமளிப்பாய் ஐங்கரனே
வரும் தீமை போக்கிவிட விரைந்தருளும் பெருமானே
வந்த குறை அகற்றிவிட விரைந்து வருவாய் ஐங்கரனே
வரதராஜ விநாயகரென்ற பெயர் கொண்ட பெருமானே
திருவடியைப் பற்றி நிற்போர் துணையிருப்பாய் ஐங்கரனே
அன்னை முத்துமாரியம்மன் அருகு கொண்ட பெருமானே
ஆற்றல் கொண்டு நாம் நிமிர வழிதிறப்பாய் ஐங்கரனே
அறிவுதந்து, ஆதரித்து அரவணைக்கும் பெருமானே
அபயம் தந்து எமைக் காக்க உடன் வருவாய் ஐங்கரனே
சங்கடங்கள் தீர்த்துவிட தயைபுரியும் பெருமானே
சக்தியற்ற மக்களுக்குத் துணையிருப்பாய் ஐங்கரனே
உன்னருளால் உலகமெல்லாம் உய்யவேண்டும் பெருமானே
உற்றவரும், ஊரவரும் நலம் பெறச்செய் ஐங்கரனே
நற்கருணைப் பேரருளே நலங்கள் செய்யும் பெருமானே
நாடியுந்தன் அடிபணிந்தோம் எமக்கருள்வாய் ஐங்கரனே.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen