செய்திகள்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் தொடர்ந்த பதற்றம் நீங்கியது.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் நேற்று காலை அமைதியின்மை ஏற்பட்டது.

ரயில் நிலையத்திலுள்ள பற்றுச்சீட்டு விநியோகிக்கும் பகுதிகள் மூடப்பட்டிருந்ததை அடுத்தே, இந்த பதற்ற நிலை ஏற்பட்டதாக மலையகம் செய்தியாளர் தெரிவித்தார்.

புகையிரத ஊழியர்களினால் நேற்று முதல் முன்னெடுக்கப்படும் சட்டப்படி வேலை நிறுத்தப் போராட்டத்தை அடுத்தே, பற்றுச்சீட்டு விநியோகிக்கும் பகுதிகளில் மூடப்பட்டிருந்தன.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத ஊழியர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சட்டப்படி வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button