சமூகம்

கொழும்பு சேர்ந்த ஒருவர் ஹட்டனில் சடலமாக மீட்பு!

ஹட்டன் புகையிரத நிலையத்தில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் நேற்று முன் தினம் சடலமாக மீட்கட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிப்பதற்கு, புகையிரத நிலையத்திற்கு வந்துள்ள பயணி புகையிரத நிலையத்திலே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பாபுல் என்ற போதை பொருளை உட்கொண்டதால் சுவாசபையினுல் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் விஷேட வைத்திய நிபுணர் இனோக்கரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தினை சேர்ந்த 48 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்துள்ள நபர் உறவினர் வீடு ஒன்றுக்கு செல்வதற்கு இரவு நேர ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு சென்று அமர்ந்த நிலையிலே உயிரிழந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், பிரேத பரிசோதனை நேற்றைய தினம் இடம்பெற்றுள்ள நிலையில், இன்றைய தினம் சடலம் உறவினர்களிடம் கையளிக்கபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, ஹட்டன் நகரில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து சில வர்த்தக நிலையங்களில் பாபுல் எனப்படும் வெற்றிலை இரகசியமான முறையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button