...
செய்திகள்

கொழும்பு- தட்டாதெரு (பண்டாரநாயக்க மாவத்தை) அருள்மிகு ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் 

கொழும்பு மாநகர் மத்தியிலே கோயில் கொண்ட சுப்ரமணியா
கோருகின்ற நல்லருளைத் தயங்காது தந்திடையா
வேண்டுவது உன்கருணை வினைகளைய எங்களுக்கு 
துணையிருந்துவுன் காப்பைத் தந்தருள வேண்டுமைய்யா 
அழகு திருமுகங்கள் ஆறு கொண்ட சுப்பிரமணியா
அச்சம் தவிர்த்து வாழவழி யெமக்கு தந்திடையா
ஆற்றலுடன் நாம் திகழ என்றுமே எங்களுக்கு 
தவறாதுவுன் காப்பைத் தந்தருள வேண்டுமைய்யா 
தமிழ்த் தெய்வம் நீயென்று தரணி போற்றும் சுப்பிரமணியா
தயக்கமின்றி முன் செல்ல ஏற்ற வழி தந்திடைய்யா
ஒன்றுபட்டு வாழ்ந்து உயர்வுபெற்று எங்களுக்கு 
நன்றாக வாழவுன் காப்பைத் தந்தருள வேண்டுமைய்யா 
தேரேறிப் பவனிவந்து அருள் பொழியும் சுப்பிரமணியா
கொண்ட கொள்கை வழுவாது வாழ வழி தந்திடைய்யா 
வாழ்வுரிமை தளும்பாது வாழ்வதற்கு எங்களுக்கு 
உடனிருந்து வழிநடத்தியுன் காப்பைத் தந்தருள வேண்டுமைய்யா 
நெடிதுயர்ந்த கோபுரத்தைக் கொண்டுறையும் சுப்பிரமணியா
நித்தமுமுன் ஆசியையும் தவறாது தந்திடைய்யா 
வேற்றுமைகள் களைந்து முன்னேறிச் செல்ல எங்களுக்கு 
வேண்டும் வரம் தந்துவுன் காப்பைத் தந்தருள வேண்டுமைய்யா 
சூரபத்மன் திமிரடக்கி நல்லருளைத் தந்தவனே சுப்பிரமணியா
சூழ்நிலைகள் நன்மைதர உரிய வழி தந்திடைய்யா 
துன்பங்கள் போக்கி நிம்மதியைத் தந்து எங்களுக்கு 
நற்கருணையருளியுன் காப்பைத் தந்தருள வேண்டுமைய்யா.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen