கொழும்பு தாமரைத் தடாகப் பேரரங்கில் அதிர்ந்த தமிழரின் பறை இசை!

uthavum karangal

இலங்கை அரசின் கலைக்கழகம் வருடம் தோறும் நடத்தும் அரச நாடக விழாக்களில் சிங்கள நடனங் களோடு ஓரிரு தமிழ் நடனங்களும் இடம் பெறுவது வழமை சிங்கள மக்கள் மத்தியிலிருந்து அவர்களது பறைகள் கண்டிய நடனம் கிராமிய நடனங்கள் எனப் பல நிகழ்வுகள் இடம் பெறும்

இலங்கைத் தமிழர் சார்பில் அலங்காரமாக ஒரு பரத நிகழ்ச்சியை அவர்கள் சேர்த்துகொள்வது வழமை
அது ஒரு மரபு.

ஒரு வகைச் சடங்கும் கூட
,
அதுவும் கொழும்பிலிருந்துதான் அப்பரத நிகழ்வு தெரியப்படும் ,

இதனால் தமிழ்ர் என்றால் பரதம் என்ற ஓர் மனப்பதிவு சிங்கள மக்களிடம் உண்டு.

வேறும் பல்வகை ஆட்ட வடிவங்கள் தமிழர் மத்தியில் இருப்பதை அவர்கள் பெரும்பாலும் அறியார்

இம்முறை 11.09.2020 அன்று கொழும்பில் நெலும் பொக்குன ( தமரைத் தடாகம்) எனும் மிக பெரியதும் சகல வசதிகளும் கொண்டதுமான பெரிய அரங்கில் நடைபெற்ற அரச நாடக விழாவிற்கு கிழக்கிலிருந்து ஓர் நடன நிகழ்வு தெரியப்பட்டுள்ளது.

அது பரத நடன நிகழ்வன்று

பறை ஆட்ட நிகழ்வு,

இதை அளித்தவர்கள் கிழக்குபல்கலைக்கழக விபுலானந்த அழகியற் கற்கைகள் மாணவர்

இதன் பொறுப்பாளர் நடன விரிவுரையாளர்
கலாநிதி உசானந்தி,

இதில் அவர்கள்

பறை ஆட்டம்

கரகம்

காவடி

முதாலான கிராமியக்கலைகளை நிகழ்த்தினார்கள்
என அறிகிறோம்

இதில் பங்கு கொண்டோர் அங்கு பயிலும் நடன நாடகத்துறை மாணவர்கள்

அந்நிகழ்வு பார்வையாளர் மத்தியில் பெரு வரவேற்பு பெற்றாதாகவும் கேள்வியுற்று மகிழ்ந்தோம்

தமிழகத்தினது பறையோசையும் ,

இலங்கையின் .மலையகத்தினது தப்பு எனும் பறையோசையும்

கொழும்பில்

அதுவும் நிலும் பொக்குன எனும் பேரரங்கில்
இம்முறை தேசிய நாடக விழாவில் பெரிதாக சபை அதிர ஒலித்துள்ளது,

அங்கு வந்த தமிழரல்லாதோர் இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் பயில் நிலையிலுள்ள இன்னோர் கலைவடிவத்தையும் காணும் வாய்ப்பு, கிடைத்துள்ளது

இதனை ஒழுங்கு செய்த கலைக்கழகத்தினருக்கும்

பொறுப்பாயிருந்த விரிவுரையாளர்
கலாநிதி உசாந்திக்கும்

உற்சாகமாகப் பங்கு கொண்ட நிறுவக மாணவ மாணவியருக்கும்

எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்

இலங்கைத் தமிழரிடம் இன்னொரு
பெரும்பறை வாத்தியமும்
தம்பட்டம் எனும் இன்னொரு பறையும்
உண்டு ,

இவை

யாழ்ப்பாணம்

,மட்டக்களப்பு,

முல்லைதீவு

ஆகிய பகுதிகளில் கோவில்களில் இன்றும் வாசிக்கப்படுகின்ற தோல் வாத்தியங்களாகும்,

இப்போது இவற்றை அனைவரும் வாசிக்கிறார்கள்

அவற்றையும் இவற்றோடு இணைத்திருப்பின் இன்னும் நாம் மேலும் மகிழ்ச்சியடைந்திருப்போம்

இதில் பாடப்பட்ட பாடலையும் எம் இலங்கை நாட்டுப்பாடாலாக்கியிருக்கலாம்

எம்மிடம் நாட்டார் பாடலுக்கா பஞ்சம்?.

காவியப்பாடல்,

மாரிஅம்மன் பாடல்

என ஆட்ட லயம் மிக்க சடங்கு பாடல்கள்,

வசந்தன் பாடல்கள்,

தொழிற்பாடல்,

வேடிக்கைப்பாடல்

கூத்துப்பாடல்

என வளம் நிறைந்த ஆட்டப் பாடல்கள் உண்டு

நாட்டார் பாடல் என்றால் அது தமிழ் நாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் பாடல்கள்தான்
அதுவும் தொலைகாட்சி நிறுவகம் நடத்தும் நிகழ்வுகளில் பாடப்படும் பிரபலமான பாடல்கள்தான்
என்ற ஒரு மாயை

பொதுவாக இலங்கைத் தமிழ் மக்களிடம் இந்த மின்னியல் ஊடகங்கள் விதைத்துள்ளன

விடயம் அறியாத பொது மக்கள் ஏமாறலாம்

இலங்கையின் உயர்கல்வி நிறுவகம் ஏமாறலாமா?

வழிகாட்ட வேண்டியது கற்றோர் கடமை அல்லவா?

எனினும் இம்முயற்சிலீடுபட்டமைக்காக நான் இவர்களை மிகவும் பாராட்டி வாழ்த்துகிறேன்

இம்முயற்சி மேலும் தொடர்வதாக.

மாணவர்களின் ஈடு பாடும்
மகிழ்ச்சியும் அவர்களின்
பிரகாசமான மலர்ந்த முகங்களில் தெரிகின்றன

மிகுந்த ஈடுபாட்டுடன் அவர்கள்
பறை இசைக்கிறர்கள்

எத்த்னை மகிழ்ச்சி எமக்கு

மாணவரகளே நமது மண்ணின் கலை மீது கவனம் செலுத்துங்கள்.

அதனை உங்களுக்குள் உள் வாங்குங்கள்

உங்கள் திறமைகளை அதனுள் செலுத்துங்கள்

உங்களின் பயிற்சி பெற்ற லாவகமான உடலூடாக அது வருகையில் அது இன்னொரு பரிமாணம் பெறும்

திறமான புலமை என பிறநாட்டார் உமை வணக்கம் செய்யட்டும்

அனைவருக்கும் வாழ்த்துகள்

2011 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சர்வதேச இசை விழாவில் இதே நிறுவன மாணவர்க்கு உள்ளூர்ப் பறை பழக்கி
அப்பறையையும் பறை இசையையும் அறிமுகப்படுத்தினர் இன்று
அங்கு இசைத்துறைதலைவராக இருக்கும்
கலாநிதி பிரதீபனும்
நாடகத் துறை சிரேஸ்ட விரிவுரையாளராயிருக்கும் மோஹனதாசனும்
நாடகத் துறையும் இசைத் துறையும் அதில் இணைந்தன

பின்னர் நடைபெற்ற சர்வதேச இசை விழாவொன்றில்
கிழக்கிலங்கைச் சடங்கு பாடல்களை
மண்ணின் மணம் மாறாது
இசையுடனும் ஆடலுடனும் தயாரித்து இசைத்துறை சார்பில் வழங்கினார் இசை விரிவுரையாளார்
பிரியா ஜதீஸ்வரன்

ஆக்கம் : மௌனகுரு சின்னையா

தொடர்புடைய செய்திகள்