செய்திகள்

கொழும்பு- தெகிவளை அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில்..

 
அன்பின் இலக்கணம் ஆஞ்சநேயர் 
ஆசைகள் வென்ற வீரனவர்
அச்சம் போக்கி அருளிடுவோன்
அகந்தை அகற்றி அருளளிப்பார்
வெற்றிகள் அருளும் ஆஞ்சநேயர் 
வேதனை களையவே உதவிடுவார்
எத்தனை துன்பம் வந்திடினும்
அத்தனையும் அகற்றி அருளளிப்பார்
அரக்கரை வென்ற ஆஞ்சநேயர் 
ஆற்றல் நிறைந்த இராம பக்தர்
ஆணவம் அகற்றி அருளிடுவோன்
நம்புவோர் நலன் காத்தருளிடுவார்
தடைகள் நீக்கும் ஆஞ்சநேயர் 
தருமம் காக்கும் தயவுடையோன்
கருணை கொண்டு காத்திடுவார்
அரவணைத் தெமக்கு அருளிடுவார்
சஞ்சலம் போகும் ஆஞ்சநேயர் 
தெகிவளை நகரில் வந்தமர்ந்தார்
நீதி நெறிமுறை காத்திடுவார்
நம்துணையாக இருந்தருளிடுவார்
ஒழுக்கம் நிறைந்தவர் ஆஞ்சநேயர் 
எப்பொழுதுமெமைக் காத்திடுவார்
நம்பிக்கையுடனே தொழுதிடுவோம்
வாழ்வில் வளமே பெற்றிடுவோம்.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button