...
செய்திகள்

கொழும்பு- பம்பலப்பிட்டி அருள்மிகு மாணிக்கப் பிள்ளையார் திருக்கோயில் 

கொழும்பு மாநகரினிலே கோயில் கொண்ட பெருமானே 
கொள்கையுறுதியுடன் நாம் வாழ அருளிடைய்யா 
உலகமெங்கும் கருணைமழை பொழிந்துவிடும் கணபதியே
என்றுமெம்முடனிருப்பாய் மாணிக்கப் பிள்ளையாரே
துன்பமில்லா நல்வாழ்வு எமக்கென்றும் நிலைத்துவிட பெருமானே 
துயரங்கள் போக்கி மனநிறைவைத் தந்திடைய்யா 
கங்கையம்மை முடிகொண்டு காத்தருளும் சிவன் மகனே
என்றுமெமக் கருளிடுவாய் மாணிக்கப் பிள்ளையாரே
வேழமுகம் கொண்டருளும் விநாயகப் பெருமானே 
வேதனைகள் நெருங்காத பெருவாழ்வைத் தந்திடைய்யா 
நம்பிக்கை கொண்டவர்கள் நலன் காக்கும் உத்தமனே
எம்மிதயம் இருந்தெமக்கு உதவிடுவாய் மாணிக்கப் பிள்ளையாரே
மேற்கிலங்கை இருந்தருளும் உமையவளின் புத்திரனே
வேற்றுமைகளின்றி நாம்  இணைந்து வாழ வழி தந்திடைய்யா 
ஐந்து கரங்கொண்டருளும் ஆதிசிவன் புத்திரனே
ஐயமின்றி நாம் வாழ எமக்கருள்வாய் மாணிக்கப் பிள்ளையாரே
திசையெங்கும் அருள்பரப்பி துன்பங்கள் தீர்க்கும் ஐயா 
எத்திசையுமுன்னருளால் ஏற்றமுறச் செய்திடைய்யா
அருள் மழையைப் பொழிந்தெமக்கு ஆறுதலைத் தந்திடுவாய் 
வீரமுடன் தலைநிமிர எமக்கருள்வாய் மாணிக்கப் பிள்ளையாரே
தளர்வில்லா அறநெறியின் காவலனே பிள்ளையாரே
நேர்மையுடன் முன்செல்ல எங்களுக்கு அருளிடைய்யா 
இன்னல் பகை கொடுமை நெருங்காது தடுத்திடைய்யா
உன்னடியே சரணடைந்தோம் மாணிக்கப் பிள்ளையாரே.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen