...
செய்திகள்

கொழும்பு- பம்பலப்பிட்டி அருள்மிகு பழைய கதிரேசன் திருக்கோயில் ..

கொழும்பு- பம்பலப்பிட்டி அருள்மிகு பழைய கதிரேசன் திருக்கோயில் 
(வஜிரா பிள்ளையார் கோயில் )
கொழும்பு நகர் எழுந்தருளி அருள் வழங்கும் பிள்ளையாரே
தளராத மனவுறுதி தந்தெம்மைக் காப்பவரே
துன்பம் தரும் கொடுமைகளைத் தடுத்திடவே வருபவரே
நம்பித் தொழும் உன்னடியார் உள்ளங்களில் உறைந்திடப்பா
தொழுதுநிற்கும் பக்தர்களுக்கருள் வழங்கும் பிள்ளையாரே
அருளளித்து, ஆறுதலும் தந்தெம்மைக் காப்பவரே
தீயபகை, கொடுமைகளை விலக்கிடவே வருபவரே
நெருங்கிவரும் உன்னடியார் உள்ளங்களில் உறைந்திடப்பா
எட்டுத்திக்கும் அருள் பொழிந்து நலம் வழங்கும் பிள்ளையாரே
என்றுமெம்முடனிருந்து உலகினையே காப்பவரே
அருகிருந்து, அரவணைத்து எமைக்காக்க வருபவரே
உருகியுந்தன் அடிபணியும் உள்ளங்களில் உறைந்திடப்பா
அழகுமிகு திருக்கோயிலிருந்தருளும் பிள்ளையாரே
அச்சமில்லா மகிழ்வு தந்தெம்மைக் காப்பவரே
உயர்ந்திடவே நம்வாழ்வு உறுதுணையாய் வருபவரே 
எம்முடனேயிருந்தெமது உள்ளங்களில் உறைந்திடப்பா
பம்பலபிட்டியிலேயிருந்தருளும் பிள்ளையாரே
பாழடையும் நிலைதவிர்த் தெம்மைக் காப்பவரே
துயர்போக்கி மகிழ்வளிக்க துரிதமாய் வருபவரே
பற்றி நிற்கும் பக்தர்களின் உள்ளங்களில் உறைந்திடப்பா
ஆடிவேல் விழாகாணும் ஐயனே பிள்ளையாரே
மறமனது கொண்டோரை அடக்கியெமைக் காப்பவரே
மழுங்கும் நிலை தடுத்தெம் வாழ்வு மலரச்செய்ய வருபவரே
காத்து வளமளித்து, கருணை செய்து எம் உள்ளங்களில் உறைந்திடப்பா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen