கொழும்பு மக்களுக்கு அரசாங்கம் விடுத்த முக்கிய செய்தி

கொழும்பு வாழ் மக்களுக்கு அரசாங்கத்தினால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எந்தவித அச்சமும், பயமும் இன்றி அலுவலகங்களுக்கு மற்றும் மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்லலாம் என தெரிவித்துள்ளது.
கொழும்பு நகரம் முழுமையான பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அச்சமின்றி நாளாந்த கடமைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.
விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் இன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு நகரத்தின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு நேற்றும், இன்றும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சில சமயங்களில் இன்றைய தினமும் தொடரக் கூடிய நிலை உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சமகால அரசாங்கத்திற்கு எதிராக நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி தோல்வியில் முடிந்துள்ளதாக அரச தரப்பினர் தெரிவித்துள்ளனர்.