...
செய்திகள்

கொழும்பு- மருதானை கப்பித்தாவத்தை அருள்மிகு ஸ்ரீ கைலாசநாத சுவாமி திருக்கோயில்

கொழும்பு- மருதானை கப்பித்தாவத்தை அருள்மிகு ஸ்ரீ கைலாசநாத சுவாமி திருக்கோயில் 
கருணாகடாட்சி அம்மையுடன் உறையும் சிவனே 
தளர்வில்லா மனத்தினராய் நாம் வாழ அருளிடைய்யா 
நன்மை யெங்கும் நிறைந்து விட நாமெல்லாம் நலமடைய 
உரிய வழி காட்டிடைய்யா கைலாசநாதப் பெருமானே 
கைலேஸ்வரம் கோயில் கொண்டு நம்மை ஆளும் சிவனே 
கரவில்லா மனத்தினராய் நாம் வாழ அருளிடைய்யா 
 கவலையெல்லாம் மறைந்து விட நாமெல்லாம் மகிழ்வடைய
ஏற்ற வழி காட்டிடைய்யா கைலாசநாதப் பெருமானே 
கொழும்பு நகர் மத்தியிலே வீற்றிருக்கும் சிவனே 
கொடு பகையும், கொலை வெறியும் அண்டா நிலை அருளிடைய்யா 
மனநிறைவு பெற்றவராய் நாமென்றும் வாழ்வதற்கு 
உரிய வழி காட்டிடைய்யா கைலாசநாதப் பெருமானே 
கணபதியின் திருக்கோயில் அருகு கொண்டுறையும் சிவனே 
காலமெல்லாம் உன்துணையைத் தவறாது அருளிடைய்யா 
பஞ்சமா பாதகங்கள் நெருங்காத நிலை தந்து 
ஏற்ற வழி காட்டிடைய்யா கைலாசநாதப் பெருமானே 
சித்தமெல்லாம் நிறைந்திருந்து சிறப்பளிக்கும் சிவனே 
சீலம் நிறை வாழ்வு நிலை நாமடைய அருளிடைய்யா 
மருதானையில் தனியிடத்தில் உறைகின்ற நீயெமக்கு
உரிய வழி காட்டிடைய்யா கைலாசநாதப் பெருமானே 
காத்து மறைத்து அருளுகின்ற சிவனே கப்பித்தாவத்தையிலிருந்து 
நல்லறிவை அருளிடைய்யா 
துன்பமில்லா பெருவாழ்வை இப்பிறப்பில் நாம் பெறவே
ஏற்ற வழி காட்டிடைய்யா கைலாசநாதப் பெருமானே.
ஆக்கம்- த மனோகரன்.
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen