...
செய்திகள்

கொழும்பு- மருதானை- கப்பித்தாவத்தை அருள்மிகு ஸ்ரீ பால செல்வ விநாயகமூர்த்தி திருக்கோயில் 

கொழும்பு மாநகர் மத்தியிலே கோயில் கொண்டு
அருளுகின்ற சிவனார் திருக்குமரா
பாவவினையறுத்து பக்குவமாய் வாழ்வதற்கு 
ஏற்ற வழி காட்டி உய்விக்க எழுந்தருள்வாய் 
பஞ்சமா பாதகங்கள் நிகழாது தடுத்திடவே
நெஞ்சில் நாமுறுதி கொள்ள நீயருள வேண்டுமைய்யா 
தஞ்சமென்றுன்னடியை நம்பிவரும் அடியவர்கள்
தொல்லை களைந்து துயர் நீக்க எழுந்தருள்வாய் 
குஞ்சரத்தின் முகங்கொண்ட திருவுருவைக் கொண்டவரே
வஞ்சனைகள் சூது வகையற்ற கொடுமைகளை 
இல்லாதொழித்திடவேயுன் பாதம் பற்றி நிற்கும் 
அன்பர்கள் மனவமைதி அளித்திடவே எழுந்தருள்வாய் 
மருதானை நல்லிடத்தில் எழுந்து நிற்கும் பெருமானே
மாற்றமில்லா நிம்மதிக்கு உன் துணையே தாருமைய்யா
ஏற்றம் பெற்று உயர்நிலையைத் தான் அடைந்து
வளமான வாழ்வை உறுதி செய்ய எழுந்தருள்வாய் 
தீவுபோல் தனித்திருக்கும் கப்பித்தாவத்தையிலமர்ந்து அருள் பொழியும் 
பால செல்வ விநாயக மூர்த்திப் பெருமானே 
தீயவர்கள் கொடும் செயல்கள் இல்லாது துடைத்தெறிந்து
நல்லவர்கள் சீர்மையுடன் வாழ வழி செய்ய எழுந்தருள்வாய் 
உயர்ந்த பெருங் கோபுரத்தை உடையவரே பெருமானே 
உள்ளத்திலுறுதியையும், வாழ்வினிலே மேன்மையையும் 
தந்தெம்மைக் காத்து வாழவைக்க உறுதி செய்ய
என்றும் உடனிருந்து உதவிடவே எழுந்தருள்வாய் பெருமானே. 
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen