செய்திகள்

கொழும்பு மாநகரில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நடும் வேலத்திட்டம்..

கொழும்பிற்கு மரம் எனும் தொனிப்பொருளின் கீழ் கொழும்பு மாநகரில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

ஒரு வருடகாலப்பகுதிக்குள் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அங்குரார்ப்பண நிகழ்வுக்கு முன்னர் 15 ஆயிரம் கன்றுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

பாடசாலை மாணவர்கள் உட்பட மக்களுக்கு இந்த மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளன. கொழும்பு மாநகரில் நிலவும் ஒட்சிசன் பிரச்சினைக்கு தீர்வாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

விகாரமஹாதேவி பூங்காவில் கிராமிய பழவகை பூங்கா ஒன்றும் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தில் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு, சுற்றாடல் கல்வி அமைச்சு உள்ளிட்ட பல நிறுவனங்களை பங்கேற்க செய்வதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்க தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button