ஆன்மீகம்

கொழும்பு மாநகர்- கொச்சிக்கடை அருள்மிகு பொன்னம்பலவாணேசுவரம் திருக்கோயில்

ஆக்கம்- த.மனோகரன். துணைத் தலைவர், அகில இலங்கை இந்து மாமன்றம்.

கொழும்பு மாநகரினிலே வீற்றிருக்கும் சிவனே
தரணியெங்கும் நல்லமைதி நிலைக்க அருள் தருவாய்
தொன்மைமிகு தமிழ் மொழியை வாழவைப்பாய் ஐயா
அன்னை சிவகாம சௌந்தரியுடன் உறையும் சொர்ணசபேசப் பெருமானே

தரணியையே தாங்கி நிற்கும் தயாளனே சிவனே
திறமையுடன் நேர்மையுடன் வாழ அருள் தருவாய்
மாசற்ற மனம் தந்து
வாழவைப்பாய் ஐயா
அன்னை சிவகாம சௌந்தரியுடன் உறையும் சொர்ணசபேசப் பெருமானே

பொன்னம்பலவாணேசுவரத் திருக்கோயிலுறை சிவனே
பொறுமையுடன், பெருமையுடன் வாழ அருள் தருவாய்
மானமுடன் இப்புவியில் வாழவைப்பாய் ஐயா
அன்னை சிவகாம சௌந்தரியுடன் உறையும் சொர்ணசபேசப் பெருமானே

சிதம்பரத்தில் கால்பதித்து ஆடுகின்ற சிவனே
சீர்மையுடன், சிறப்புடனே வாழ அருள் தருவாய்
கலக்கமில்லா மனத்துடனே வாழவைப்பாய் ஐயா
அன்னை சிவகாம சௌந்தரியுடன் உறையும் சொர்ணசபேசப் பெருமானே

தமிழ் மொழியைத் தரணிக்கு உவந்தளித்த சிவனே
தரணியிலே நம்குலத்தை புகழுடனே வாழ அருள் தருவாய்
திடங்கொண்ட மனத்தினராய் வாழவைப்பாய் ஐயா
அன்னை சிவகாம சௌந்தரியுடன் உறையும் சொர்ணசபேசப் பெருமானே

தவறு செய்வோர் கொட்டமதை அடக்கிவிடும் சிவனே
மேன்மைமிகு நல்வழியில் வாழ அருள் தருவாய்
நம்பித் தொழும் எம்குறைகள் போக்கி
வாழவைப்பாய் ஐயா
அன்னை சிவகாம சௌந்தரியுடன் உறையும் சொர்ணசபேசப் பெருமானே.

Related Articles

Back to top button