அரசியல்செய்திகள்

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்ட அறிக்கை நாளை.

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்ட அறிக்கை நாளை.

கொழும்பு, மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த அறிக்கையை மாநகரசபை மேயர் ரோஸி சேனாநாயக்க நாளை காலை 10 மணிக்கு சபையில் சமர்ப்பிக்கவுள்ளார்.

வெளியிடப்பட்டிருக்கும் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையின் சுருக்க அறிக்கையின் பிரகாரம் 2020 வருடத்துக்கு உத்தேச எதிர்பார்க்கை வருமானமாக 16,145,994,000 கோடி ரூபாயும் உத்தேச எதிர்பார்க்கை செலவீனம் 16,145,994,000 கோடி ரூபாயும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்த வருடத்துக்காக எதிர்பார்க்கப்படும் வரி வருமானம் 481 கோடி ரூபாய் எனவும் மாநகர சபை பிரதிப் பொருளாளர் என்.பி.கொத்தலாவல வெளியிட்டுள்ள கணக்கறிக்கையின் சுருக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download