...
செய்திகள்

கொழும்பு முகத்துவாரம்- அருள்மிகு ஸ்ரீ வெங்கடேஸ்வர மகாவிஷ்ணு திருக்கோயில் 

அலைமோதும் பெருங்கடலின் கரையமர்ந்த பெருமாளே
அருள் பொழியும் திருக்கோயில் கொண்டவன் நீ திருமாலே
மருள் நீக்கி உலகாள வந்தருளும் பேரருளே
நிம்மதியாய் நாம் வாழ நீயருள வேண்டுமய்யா 
களனிகங்கை முகத்துவாரம் அருகு கொண்ட பெருமாளே
காத்தருளும் கடமைகொண்ட கடவுள் நீ திருமாலே
கவலையின்றி நாம் வாழ வழிகாட்டும் பேரருளே
கலக்கமின்றி நாம் வாழ நீயருள வேண்டுமய்யா 
கொழும்பு மாநகர் எல்லையிலே கோயிலுறை பெருமாளே
வளம் நிறைந்த வாழ்வுக்கு உறுதுணை நீ திருமாலே
மகிழ்ச்சி பொங்க வாழ்வதற்கு வழிசெய்யும் பேரருளே
வாட்டமின்றி நாம் வாழ நீயருள வேண்டுமய்யா 
சிவனாரின் திருக்கோயில் அருகு கொண்ட பெருமாளே
வருங்காலம் மேன்மையுற வழிகாட்டி நீ திருமாலே
காவல் செய்து காத்தருளும் கருணைகொண்ட பேரருளே
சிந்தையிலே நல்ல நிலை நீயருள வேண்டுமய்யா 
துன்பங்கள் துடைத்தெறிந்து துணிவு தரும் பெருமாளே
தூயவள வாழ்வதனைத் தந்தருளும் திருமாலே
சுற்றி வரும் தீமைகளைச் சுழன்றழிக்கும் பேரருளே
சுற்றமெல்லாம் சுகம் பெற்று நாம் வாழ நீயருள வேண்டுமய்யா 
அதர்மத்தை அழித்தகற்ற அவதரிக்கும் பெருமாளே
மேதினியில் நம்முரிமை உறுதி செய்யும் திருமாலே
கேட்டவரம் தந்தெமக்கு அருள் புரியும் பேரருளே 
கேடின்றி நாம் வாழ நீயருள வேண்டுமய்யா. 
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen