...
செய்திகள்

கொழும்பு- முகத்துவாரம் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்

 
அலை மோதும் பெருங்கடலின் அருகமர்ந்த சிவனே
அருள் பொழிந்து நலங்காக்க விரைந்து நீ வருவாய் 
கடலலை போல் தொடர்ந்து வரும் கவலைகளைப் போக்கி
இதயமதில் நிம்மதியை நிறைத்திடுவாய் ஐயா
கொழும்பு மாநகர் எல்லையிலே வீற்றிருக்கும் சிவனே
நலந்தந்து வாழவைக்க விரைந்து நீ வருவாய் 
பாதகங்கள் போக்கி துணையிருக்க வந்து 
பாசமுடன் அமைதியையும் வழங்கிடுவாய் ஐயா
களனிகங்கை முகத்துவாரம் அருகு கொண்ட சிவனே
கலங்காத மனவுறுதி தந்தருள விரைந்து நீ வருவாய்
நம்பித் தொழும் நம்மவரின் நலன் காத்து அருளி 
ஆறுதலைத் தந்தெம்மை அரவணைப்பாய் ஐயா
தேரேறிப் பவனி வந்து அருள் வழங்கும் சிவனே
தேசமெங்கும் நல்லமைதி காத்தருள விரைந்து நீ வருவாய் 
அச்சமில்லா நிம்மதியும் இணைவாழ்வை நாமடைய
அருகிருந்து துணை செய்து காப்பளிப்பாய் ஐயா 
அருணாசலேஸ்வரத் திருப்பதியில் இருந்தருளும் சிவனே
ஆற்றலுடன் தலைநிமிர்ந்து வாழ வழியமைக்க விரைந்து நீ வருவாய் 
இளம் பிறையை முடிசூடி உலகாளும் இறைவா
எம்மிதயம் குடியிருக்க வந்திடுவாய் ஐயா 
அருணாச்சலேஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்ட சிவனே
நம்தமிழர் ஆளுமையை நிறுவிடவே விரைந்து நீ வருவாய் 
மேதினியில் வேற்றுமைகள் அடியோடு அற்றிடவே
உலகாளும் பெருமானே அருள் வழங்க வந்திடய்யா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen