செய்திகள்
கொழும்பு வாழ் மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்

கொழும்பு – கொட்டாஞ்சேனை கே. சிறில் பெரேரா மாவத்தை, வாசல சந்தியில் இருந்து வோல்ஸ் லேன் வீதி சந்தி வரையான பகுதியில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் குடிநீர் குழாய் பொருத்தும் பணிகள் இடம்பெற உள்ளதால் இன்று இரவு 9.00 மணி முதல் எதிர்வரும் 24ம் திகதி அதிகாலை 5.00 மணி வரை வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளது.
இதன்காரணமாக அந்த வீதியை பயன்படுத்துவோர் குறிப்பிட்டள்ள நாட்களில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.