கந்தபளை தாமரை ஏ. யோகாவின் “எங்கள் தோட்டம்” நூல் அறிமுக விழா நாளை ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ் சங்கத்தில் காலை 09.30 மணிக்கு இடம் பெறவுள்ளது.
இந்த நூல் அறிமுக விழாவை கொழும்பு வாழ் மலையக நண்பர்கள் வட்டம் ஒழுங்கு செய்துள்ளது.
மலையகத்தின் மூத்த எழுத்தாளர் சாகித்ய ரத்னா தெளிவத்தை ஜோசப் தலைமை தாங்கும் இந்த நூல் அறிமுகவிழாவில், முதல் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்கின்றார்.
நிகழ்வின் வரவேற்புரையை ஊடகவியலாளர் க .வர்ஷினியும் ,நூல் அறிமுகத்தை ஊடகவியலாளர் ஆர்.ஜே.தனாவும் வழங்கும், அதே வேலை நூலாசிரியர் அறிமுகத்தை ஆசிரியர் ஷான் சதீஸ் வழங்க ,பேராசிரியர் சோ.சந்திரசேகரம் கருத்துரையை வழங்குகின்றார்.நூல் பற்றிய விமர்சனத்தை கொட்டகலை அரசினர் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் எம் .எச்.எம் ஜவ்பர் வழங்குகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.