செய்திகள்

கொழும்பு- வெள்ளவத்தை அருள்மிகு ஐஸ்வர்ய லட்சுமி அம்மன் திருக்கோயில் 

கொழும்பு மாநகரில் கோயில் கொண்ட ஈஸ்வரியே
எங்களுக்கு வாழ்வளிக்க வந்திடம்மா
ஆதரித்து அரவணைக்கும் அலைமகளே
மாண்புடனே வாழவழி தந்திடம்மா
எங்கும் நிறை இணையில்லா ஈஸ்வரியே
செம்மை மிகு நன்னிலையைத் தந்திடம்மா
செல்வங்களை அருளுகின்ற அலைமகளே
நம் பாதையினைச் சீராக்க வந்திடம்மா
கல்விக் கதிபதியான ஈஸ்வரியே
கண்திறந்து பார்த்து அருள வந்திடம்மா
அறிவளித்து வழிநடத்தும் கலைமகளே
அச்சமின்றி வாழவழி தந்திடம்மா
அழியாத கல்வி தரும் ஈஸ்வரியே
அருள்வெள்ளம் பொங்கிடவே அருளிடம்மா
அறிவருவி பெருக்கிவிடும் கலைமகளே
அறநெறியின் வழியினையே திறந்திடம்மா
வெள்ளவத்தையில் வீற்றிருக்கும் ஈஸ்வரியே
நம் வேதனைகள் மறைந்துவிட வழி செய்யம்மா
மாசற்ற அன்பு நிறை மலைமகளே
மானமுடன் தலைநிமிர துணையிரம்மா
புண்ணியர்கள் போற்றுகின்ற ஈஸ்வரியே
புவனமெங்கும் காவல் செய்ய வந்திடம்மா
பாசமுடன் அணைத்தருளும் மலைமகளே
பாதகங்கள் போக்கியெமைக் காத்திடம்மா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button