செய்திகள்

கொழும்பு- வெள்ளவத்தை- மல்லிகா ஒழுங்கை அருள்மிகு வீரமகா கண்ணகி அம்மன் திருக்கோயில்..

 
தமிழ்த் தாயின் திருமகளாய்ப் பிறந்தவளே கண்ணகி அம்மா 
தரணி போற்றும் பேற்றிற்கு உரித்தானாய் நீயே
சத்தியத்தை நிலைநிறுத்த சபதம் கொண்ட தாயே
நித்தியமும் உன்நாமம் ஒலிக்க வேண்டும் அம்மா 
பத்தினித் தெய்வமென்று பார் போற்றும் திருமகளே
பரிதவித்து, தவிதவிப்போர் துயர் போக்க வாராயம்மா
அதர்ம நிலை அழித்தொழிக்க துணிவு கொண்ட தாயே
அறநெறியை நிலை நிறுத்த உன்தயவு வேண்டும் அம்மா 
பொய் வழக்கு போட்டோரை பொசுக்கி விட்ட பெருமகளே
செங்கோல் பிசகானால் நாடு பாழடையுமெனப் புகட்டிய நாயகியே
இந்நாட்டில் நீதி நிலைநாட்ட தவறாமல் நீ எழுந்தருள வேண்டும் அம்மா 
நீதி தவறிய அரசு அழியும் என உணர்த்திய கற்பின் அரசியே
நேர்மைமிகு நல்லாட்சி எங்கும் நிலைபெறவே கருணை செய்வாய் நீயே 
அதிகார மமதையுடன் தடுமாறும் கொடியவர்கள் 
தப்பாமல் அழிவார்கள் என்றுணர்த்த விரைந்து நீ எழுந்தருள வேண்டும் அம்மா 
கொழும்பு மாநகரினிலே கோயில் கொண்ட எம் தாயே
கற்பின் பெருமையினை உலகறியச் செய்தவளே
தமிழ்ப் பண்பு தரணியிலே நித்தம் நிலைத்து நிற்க 
உன் சரிதம் என்றும் உலகறிய வேண்டும் அம்மா 
நாட்டினிலே நல்லாட்சி நாளும் தழைத்துவிட 
ஆட்டிப் படைக்கின்ற அரக்கநிலை தான் ஒழிய
சமத்துவம் நிலை பெற்று நிம்மதியாய் நாம் வாழ
ஏற்ற துணை தருவாய், ஆறுதலையும் தான் தருவாய் வீரமகா கண்ணகி அம்மா நீயே.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen