...
செய்திகள்

கொழும்பு-02- அகில இலங்கை இந்து மாமன்றம்- அருள்மிகு சிவகாமி அம்மாள் சமேத நடராஜப் பெருமான் திருக்கோயில் 

தலை தாழா நிலை தந்து காத்தருளும் பெருமானே 
சக்தியம்மை யுடனிருந்து அருளுகின்ற பேரருளே 
வளங்கொண்டு நாம் வாழ வழி அருள வேண்டுகிறோம் 
சிவகாமி அம்பாளுடனுறையும் நடராஜப் பெருமானே 
திருமாலின் மைத்துனரே திசையெங்கும் அருள்பரப்பும் பெருமானே 
பலங்கொண்டு நாம் வாழ அருளுகின்ற பேரருளே 
மகிழ்வுடனே வாழ்வதற்கு அருளளிக்க வேண்டுகிறோம்
வலுவுடனே வாழ்வதற்கு வழியமைக்கும் நடராஜப் பெருமானே 
அடிமுடிகாண வொண்ணா அற்புதனே பெருமானே 
குறையின்றி நாம் வாழ அருளுகின்ற பேரருளே 
நிலைதழும்பா நிம்மதியை எமக்களிக்க வேண்டுகிறோம்
என்றுமெம் உளமிருந்து வழிநடத்தும் நடராஜப் பெருமானே 
அகில இலங்கை இந்து மாமன்றத்தில் கோயில் கொண்ட பெருமானே 
அச்சம் அகற்றியெம்மை வாழ வைக்கும் பேரருளே 
ஒற்றுமை நிலை கொண்டு வாழவழி வேண்டுகிறோம் 
உடனிருந்து வழிநடத்தும் நடராஜப் பெருமானே 
உன்னசைவால் உலகினையே ஆட்டுவிக்கும் பெருமானே 
நன்னெறியில் நாம் வாழ அருளுகின்ற பேரருளே 
உரிமையுடன் வாழ்வதற்கு உறுதி செய்ய வேண்டுகிறோம் 
எம்மிதயம் வீற்றிருந்து விதிவகுக்கும் நடராஜப் பெருமானே 
சிவபூமி என்ற பெருமை கொண்ட இந்நாட்டிலுறை பெருமானே 
சீர்மையுடன் நாம் வாழ வழியமைக்கும் பேரருளே 
தமிழ் மொழியும் நம் மதமும் தரணியிலே பெருமை பெற வேண்டுகிறோம் 
தளர்வின்றி நாம் வாழ எமக்கருள்வாய் நடராஜப் பெருமானே.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen