...
செய்திகள்

கொழும்பு15, கிராண்ட்பாஸ் உள்ளிட்ட பல இடங்களில் திடீர் நீர் விநியோகத்தடை.

கொழும்பு மாவட்டத்தில் மட்டக்ககுளி, மோதரை, கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளில் நீரின்றி பெரும் அசெளகரியத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கொரோான பெருந்தொற்றுக்கு மத்தியிலிலும் கைகளை கழுவி சுத்தம் செய்ய முடியாது சுகாதார அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் இம்மக்கள்.

எவ்வித முன்னறிவித்தலுமின்றி குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளமையினால் அப்பிரதேச மக்கள் பெரும் அசௌகரியத்திற்குட்பட்டுள்ளனர்.

இதேவேளை, அளுத்மாவத்தை பகுதியில் அமைந்துள்ள குடிநீர் விநியோக குழாய் உடைந்துள்ளதால் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினால் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் தவித்து வரும் நாங்கள் தற்போது குடிநீர் இல்லாமலும் தவித்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
குடிநீர் விநியோக தண்ணீர் பவுசர்கள் வரும் வரையில் 3 மணித்தியாலமாக காத்திருப்பதாக மூதாட்டியொருவர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen