செய்திகள்

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் 58 நகரங்கள் முடக்கப்பட்டுள்ளது.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இன்றுமுதல் மேலும் 24 நகரங்களில் உள்ள கடைகளை மூட வர்த்தக சங்க தலைவர்கள் மற்றும் நகர வர்த்தக சங்கங்களின் உரிமையாளர்கள் முன்வந்துள்ளனர்.

இந்த நகரங்களில் மருந்து கடைகள், எரிவாயு நிரப்பு நிலையங்கள் மற்றும் மருத்துவ நிலையங்கள் மாத்திரமே திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 34 நகரங்களில் கடைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன, முடக்கப்பட்டுள்ள நகரங்களின் மொத்த எண்ணிக்கை 58 ஆக உள்ளது.

அதற்கமைய, பிபில, மொனராகலை, மெதகம, சியம்பலான்டுவ, புத்தள, எம்பிலிப்பிட்டிய, அயகம, கிரிஎல்ல, பதுளை, ரக்வானை, கொடகவெல, நொச்சியாகம, கெப்பட்டிபொல, ருவன்வெல்ல, திருகோணமலை, ஹாலிஎல, கனேமுல்ல, தவலம, கும்புருப்பிட்டிய, பதியலெல்ல, இமதுவ, ஹட்டன், கொட்டகலை, பதியதாலவ ஆகிய நகரங்களின் கடைகளே இவ்வாறு இன்று முதல் மூடப்படவுள்ளன.

கம்பஹா, அம்பலன்தொட்டை, அம்பலங்கொடை, மரதகஹமுல, வேயன்கொட, தங்கொட்டுவ, சேருநுவர, உல்பத்த, தங்கல்ல, பதுளை, பலங்கொடை, வலப்பனை, பண்டாரவெல, மாத்தளை, யட்டவத்த யேலக்கர, அநுராதபுர, சிலாபம், அம்பாறை, வென்னபுவ, கெக்கிராவ, மொனராகலை, தம்புள்ளை, கஹவத்தை, திவுலபிட்டிய, தெரணியகல, ஊருகஸ்மஹந்திய, பல்லேபொல, அலவ்வ மற்றும் யாழ்ப்பாண நகரங்களின் வர்த்தக நிலையங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button