சிறப்பு

கொவிட் காலத்திலும் தொழிலாளர்களின் பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு அடிப்படை காரணியாக அமைவது..?

இலங்கையை பொறுத்தவரையில் வருடமொன்றிற்கு கிட்டத்தட்ட 23000 பேர் மதுசார பாவனையினால் மரணிக்கின்றனர். 297 மில்லியன் இலங்கை ரூபாய் மதுசார பாவனைக்காக எமது மக்களால் செலவழிக்கப்படுகின்றது.

மரணிக்கும் அத்தனை பேரின் மனைவியரும் இள வயதிலேயே விதவையாக்கப்பட்டு பிள்ளைகள் அநாதைகளாகின்றனர். செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் தனது குடும்பத்திற்கு செலவழிக்காமல் அநாவசியமாக மதுசாரத்திற்கு செலவழிக்கும் பணத்தொகையாகும் அதாவது குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு சொந்தமாக்கிக்கொடுக்கும் இலாபம்.

சில கிராமங்களிலும், பெருந்தோட்டங்களிலும் குறிப்பாக தொழில் செய்வோரிற்கு பணம் கிடைக்கும் நாளில் (சம்பள நாட்களில்) கிடைக்கும் பணத்தொகையில் 2ஃ3 பங்கு மதுசாரத்திற்கே செலவழிக்கின்றனர் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு வசிப்போர் பணக்காரர்கள் அல்ல அன்றாடம் உணவிற்கும், வௌ;வேறு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் கூலித் தொழில் செய்பவர்களாகவே உள்ளனர்.

மேலும் குறைவான போசனை மட்டம், வறுமை, சுகாதார பிரச்சினைகள், மன அழுத்தங்கள், குடும்ப வன்முறைகள், பாடசாலை இடை நிறுத்தங்கள் போன்ற அடிப்படை பிரச்சினைகள் தொழிலாளர்கள் மத்தியில் அதிகரிப்பதற்கும் மதுசார பாவனை ஒரு அடிப்படைக் காரணியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடினப்பட்டு உழைக்கும் பணத்தில் மகிழ்ச்சியாக வாழ்வதும் தொழிலாளர்களின் உரிமையே! சாராய முதலாளிகளிடமிருந்து தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு மன்வருவோம்.

நிதர்ஷனா செல்லதுரை

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com