செய்திகள்

கொவிட் சடலங்களை தகனம் செய்ய பெருந்தொகை நிதி ஒதுக்கீடு.

கொவிட் தொற்றினால் உயிரிந்த 2417 சடலங்களை தகனம் செய்வதற்காக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சினால் ஒரு கோடியே 20 லட்சத்து 85 ஆயிரம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.

தகனம் செய்வதற்காக உள்ளுராட்சி மன்றங்களினால் செலவிடப்பட்ட பணமே, இவ்வாறு வழப்பட்டுள்ளது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இந்த பணம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 31ம் திகதி வரை தகனம் செய்யப்பட்ட 2417 கொவிட் சடலங்களுக்காக இந்த பணம் வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் சடலமொன்றை தகனம் செய்வதற்காக 5000 ரூபா விதம் இந்த பணம் 69 உள்ளுராட்சி சபைகளுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் 488 சடலங்களும், வடமேல் மாகாணத்தில் 391 சடலங்களும், ஊவா மாகாணத்தில் 171 சடலங்களும், தென் மாகாணத்தில் 537 சடலங்களும், மத்திய மாகாணத்தில் 100 சடலங்களும், மேல் மாகாணத்தில் 399 சடலங்களும், கிழக்கு மாகாணத்தில் 71 சடலங்களும் இவ்வாறு தகனம் செய்யப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்வதற்காக செலவிடப்படும் பணத்தை, உள்ளுராட்சி மன்றங்களுக்கு தாமதமின்றி வழங்க எதிர்பார்த்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button