...
செய்திகள்

கொவிட் தொற்றின் அபாயம் முழுமையாக நீங்கவில்லை – இராணுவத் தளபதி

பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் நாட்டில் இன்னும் கொவிட் தொற்றின் அபாயம் முழுமையாக நீங்கவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

பல மாதங்களின் பின்னர் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன.

மக்களின் நலனைக் கருத்திற் கொண்டே சுகாதார கட்டுப்பாடுகள் இவ்வாறு தளர்த்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் நாட்டில் கொவிட் அச்சுறுத்தல் முற்றாக நீங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இன்னும் கொவிட் நோயாளர்கள் தினந்தோறும் அடையாளம் காணப்படுவதால் மக்கள் பொறுப்புணர்ந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

புதிய கொரோனா வைரஸ் திரிபுகளும் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டாலும்  கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்

Related Articles

Back to top button


Thubinail image
Screen