செய்திகள்

கொவிட் தொற்றுக்கான இணைப்பதிகாரிகளாக இராணுவத்தினர்.

கொரோனா ஒழிப்பு செயற்பாட்டிற்கான இணைப்பதிகாரிகளாக அனைத்து மாவட்டங்களுக்கும்
தலா ஒரு இராணுவ உத்தியோகத்தர் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் நேற்று இந்த நியமனம்
வழங்கப்பட்டுள்ளது.

இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க இதனை இன்று
உறுதிப்படுத்தினார்.

மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார துறையினருடன் இணைந்து இன்று முதல்
இந்த இராணுவ உத்தியோகத்தர்கள், கொவிட் தொற்று ஒழிப்புக்கான தேசிய செயலணியுடன்
செயலாற்றவுள்ளனர்.

அதன்படி மாவட்ட ரீதியில் தனிமைப்படுத்தல் நிலையங்களை பராமரித்தல், மருந்துகள்,
மருத்துவ வசதிகளை பெற்றுக் கொடுத்தல், நோயாளர்களை வைத்தியசாலைகளுக்கு கொண்டு
செல்லுதல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் புதிய இணைப்பதிகாரிகளின்
கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com