...
உலகம்

கொவிட் தொற்றுக்கு எதிரான உலகின் முதல் மரபணு தடுப்பூசி இந்தியாவில்

இந்தியாவில் ஏற்கனவே சீரம் நிறுவனத்தின் கொவிஷீல்ட், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொவெக்சின், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, அமெரிக்காவின் மொடொ்னா, உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், ஆறாவதாக ஸைடஸ் கேடில்லா நிறுவனம் தமது தயாரிப்பான மூன்று முறை செலுத்தக்கூடிய தடுப்பூசிக்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது.

இந்நிலையில் இந்தத் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையகம் அனுமதியளித்துள்ளது.

இந்த நிறுவனம் கடந்த ஜூலை முதலாம் ஆம் திகதி தமது கோரிக்கையை விடுத்திருந்தது.

இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்ட மையங்களில் தங்களின் மூன்று முறை செலுத்தக்கூடிய தடுப்பூசியை விரிவாக பரிசோதனை செய்துவிட்டதாக ஸைடஸ் கேடில்லா நிறுவனம் தெரிவித்திருந்தது.

அத்துடன் இந்திய மருந்து நிறுவனம் தயாரிக்கும் உலகின் முதல் மரபணு தடுப்பூசி என்ற அந்தஸ்தையும் இந்த தடுப்பூசி பெற்றுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊசி மூலம் தடுப்பு மருந்து செலுத்தப்படாமல், தோல் பகுதியில் ஹைப்போடெர்மிக் நீடில் (hypodermic needle) மூலம் அதிர்வலைகள், வாயுக்களின் அழுத்தம், மின்முனை மூலம் செலுத்தப்படும் 


Related Articles

Back to top button


Thubinail image
Screen