செய்திகள்

கொவிட் தொற்று அச்சறுத்தல் – மேலும் ஒருவர் மரணம் ..

அக்கரைப்பற்றைச் சேர்ந்த 54 வயதான ஒருவர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 186 ஆக உயர்வடைந்துள்ளது.

இதனிடையே, நேற்றைய தினம் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 782 ஆக
பதிவாகியுள்ளது.

இந்தநிலையில், கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் 771 பேர் நேற்று
குணமடைந்தனர்.

இதனடிப்படையில், நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 31
ஆயிரத்து 339 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் தொற்றினால் இதுவரை 185 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றுக்குள்ளானோரில் எண்ணாயிரத்து 258 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று
வருகின்றனர்

Related Articles

Back to top button