...
உலகம்

கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ள கோரிக்கைகள்

கொவிட்-19 தொற்று மற்றும் ஒமிக்ரொன் திரிபை எதிர்த்துப் போராடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் கட்டாய தடுப்பூசியை அமுல்படுத்த வேண்டியது தொடர்பில் கரிசனை காட்ட வேண்டும் என அதன் தலைவர் ஹர்சுலா வன் டெர் லியன் தெரிவித்துள்ளார்.

புதிய வைரஸ் திரிபினை எதிர்த்துப் போராடுவதற்கு தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 24 நாடுகளுக்கும் அதிகளவில் ஒமிக்ரொன் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இது கண்டறியப்பட்ட நாள் முதல் பயணக்கட்டுப்பாட்டை ஐரோப்பிய நாடுகள் இறுக்கமாக்கியுள்ளன

ஐரோப்பிய ஒன்றியத்தின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை.

எனவே தற்போது தடுப்பூசியைக் கட்டாயமாக்குவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.

பொதுவான அணுகுமுறையுடன் தடுப்பூசி செலுத்துவதனை கட்டாயமாக்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen