செய்திகள்

கொவிட் மரணம் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு

கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் மரணங்களை 48 அல்லது 24 மணித்தியாலங்களில் அதாவது அன்றைய தினத்திலேயே அறிக்கையிட சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இறப்பவர்கள் தொடர்பான அறிக்கையை இதற்கமைவாக தாமதமின்றி வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

பல நாட்களில் இடம்பெற்ற மரணங்களை ஒரே தினத்தில் அறிக்கையிடும் போது சமூகத்தில் ஏற்படும் குழப்ப நிலைக்கு தீர்வு காண்பது இதன் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.

Related Articles

Back to top button