செய்திகள்

கொவிட் 19 தொற்றின் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை

கொவிட் 19 தொற்றின் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜந்துவருட திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சமீபத்தில் உக்ரேன் நாட்டின் ஹில்டன் ஹோட்டலில் சுற்றுலாத்துறை அமைப்பார்களுடனான சந்திப்பின்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த உக்ரேன் நாடு ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. கொரோனா தொற்றுக்கும் மத்தியிலும்  உக்ரேன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்த வண்ணமுள்ளனர் . இதற்காக நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் இதன்போது கூறினார்.

சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கடந்த காலங்களில் உக்ரேன், ரஷ்யா, கஸக்ஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மூவாயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளனர். சுகாதார வழிமுறைகளை பேணிய வண்ணம் இந்த சுற்றுலா பயணிகள் தமது அன்றாட கருமங்களை இலங்கையில் முன்னெடுக்கின்றனர். தொடர்ந்தும் இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு உக்ரேன் உதவும் என்றும் அமைச்சர் இதன் போது கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைபடி, இலங்கை அரசாங்கம், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அழைத்து வரும் போது சர்வதேச அங்கீகாரம் பெற்ற சுகாதார வழிமுறைகைள பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்க தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button