செய்திகள்

கொஹூவலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: விசாரணை செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள்

கொழும்பு,கொஹூவலை பகுதியில் ஜீப் வண்டியில் சென்ற இருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக மூன்று விசேட பொலிஸ் குழுவினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

கொஹூவலை பகுதியில் ஜீப் வண்டியில் இரவு நேர விருந்தொன்றுக்கு சென்றுவிட்டு, திரும்பிக்கொண்டிருந்த நுகேகொடை பகுதியைச் சேர்ந்த இரு வர்த்தகர்களை இலக்குவைத்தே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் இதன்போதே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படு காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

கொஹூவலை – ஜம்முகஸ்முல்ல பகுதியில் நேற்று அதிகாலை 12.40 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்ற அடையாளம் தெரியாத இருவர், ஜீப் வண்டியில் பயணித்த இவ்விருவர் மீதும் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருப்பதாக தெரிவிக்கும் பொலிஸார், இன்‍று மாலை கொலையாளிகள் பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கும் இலக்கத்தகடற்ற மோட்டார் சைக்கிளொன்றினை,நுகேகொடை தெல்கந்த பகுதியில் கண்டெடுத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நுகேகொடை பொலிஸ் அத்தியட்சரின் கீழும், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவின் ஊடாகவும் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button
image download