அரசியல்செய்திகள்

கோட்டாபய ஜனாதிபதி தேர்தலில் ஒரு கட்சி அரசியல் சார்ந்து போட்டியிடவில்லை – தயாசிறி ஜயசேகர

வரலாற்றில் முதல் முறையாக, தேசிய சக்திகளின் வேண்டுகோளின் பேரில் கோட்டாபய ராஜபக்ஷ ஒரு தொழில்முறை நிபுணராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

வரலாற்றில் முதன்முறையாக கோட்டாபய ராஜபக்ஷவே ஒரு தொழில்முறை நிபுணராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார்.

அரசியல் என்பது சாக்கடை என மக்கள் தற்போது எண்ணுகின்றனர்.

ஆகவே நாட்டின் எதிர்க்காலம் வெற்றிடமாகியுள்ள இந்த சூழலில் கோட்டாபய ராஜபக்ஷ அந்த இடைவெளியை நிரப்பும் வண்ணம் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பலவகையான முயற்சிகளை மேற்கொண்டமை குறித்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று மேல் மாகாண அழகியற்கலை அரங்கில் இடம்பெற்ற நிகழ்வின் போது கைச்சாத்திடப்பட்டது.

இந்த நிகழ்வில் இரண்டு கட்சிகளினதும் சிரேஸ்ட உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டிருந்ததுடன், ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ நிகழ்வுக்கு வருகையைத் தந்ததை தொடர்ந்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

Related Articles

Back to top button