அரசியல்செய்திகள்

கோட்டாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை – கூட்டமைப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான எந்த யோசனைகளும் முன்வைக்கப்படவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

நாட்டில் இனப்பிரச்சனை ஒன்று இருப்பதாக கூட கேட்டாபய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படவில்லையென இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

அவரின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் பாராட்டி கூறும் அளவிற்கு எதுவும் இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைப் பிரச்சினை தொடர்பில் எந்தக் கருத்தும் அதில் குறிப்பிடவில்லையெனவும் எதிர்வரும் 30 ஆம் திகதி அது தொடர்பிலான அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
image download