அரசியல்செய்திகள்

கோட்டாவின் வெற்றியினையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாட்டிலுள்ள அனைத்து மக்களும், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன, தாமரை மொட்டு சின்னத்தை முன்னிறுத்தி தேர்தலுக்கான பிரசாரத்தை தற்போது முன்னெடுத்துள்ளதாகவும் இதனால் பொதுஜன பெரமுன, தமது கட்சியின் சின்னத்தை விடுத்து, வேறு சின்னத்தில் களமிறங்க முடியாது எனவும் அதாவது நாடு முழுவதும் பொதுஜன பெரமுனவின் சின்னமாக மொட்டு அறிமுகப்படுத்தப்பட்டு விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் பிரதேச மட்டத்திலிருந்து கிராம மட்டம் வரையுள்ள 90 சதவீதமான மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியினையே எதிர்ப்பார்க்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button