அரசியல்செய்திகள்

கோட்டாவும் ரணிலும் சந்தித்து பேசியது என்ன?

கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஜனாபதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பிரதமரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

அதன்போது, கொவிட் தொற்றை ஒழிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை செயற்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பில் முன்னாள் பிரதமரினால் ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்ததாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொவிட் ஒழிப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வ கட்சித்தலைவர்களையும் அழைக்குமாறு ஐதேக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க இதன்போது ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button