அரசியல்செய்திகள்

கோட்டாவை பகிரங்க விவாதத்திற்கு அழைத்துள்ள சஜித்.

நாட்டு மக்கள் அனைவரும் பார்க்கூடிய வகையில் தொலைக்காட்சியில் பகிரங்க விவாதம் ஒன்றிற்கு வருமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேதமதாஸ அழைப்பு விடுத்துள்ளார்.

சஜித்  பிரேமதாஸ தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமது கொள்கைகள் மற்றும் நோக்குத் தொடர்பில் இதன்போது ஒருவருக்கு ஒருவர் பகிரங்கமாக கருத்துக்களை மக்களுக்கு வௌியிட முடியும் என சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

பலமான வேட்பாளர் ஒருவர் தமது எதிராளியுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதில் அச்சம் அடையத் தேவையில்லை எனவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
image download