பதுளைமலையகம்விளையாட்டு

கோணக்கலை பிரிமயர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி சமநிலையில் முடிவு.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கோணக்கலை பிரிமயர் லீக் மென்பந்து
கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 14, 15,16 ஆகிய தினங்களில்
பசறை கோணக்கலை தமிழ் மகா வித்தியாலய விளையாட்டு திடலில் இடம்பெற்றது.

இச்சுற்றுப் போட்டி தொடர் இம்முறை ஆறாவது தடவையாக நடாத்தப்பட்டதுடன் 22 அணிகள் கோணக்கலை பெருந்தோட்ட அணிகள் பங்குபற்றியிருந்தன.

இவ் அணிகளில் இருந்து அரையிறுதி போட்டிகளுக்கு தெரிவாகிய கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் கோணக்கலை மேற்பிரிவு இளங்கதிர் ‘ சி ஆகிய அணிகளும், இளங்கதிர் ‘பி ‘ மற்றும் ரேந்தபல கிரிக்கெட் கழக ‘ டி’ அணிகளும் பலப்பரீட்சை நடாத்தின.

மழையுடனான சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும்
மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டிகளில்
இறுதி போட்டிக்கு தெரிவாகிய கோணக்கலை மேற்பிரிவைச் சேர்ந்த இளங்கதிர் பி மற்றும் இளங்கதிர் சி அணிகள் மோதின. இப்போட்டி சமநிலையில் நிறைவடைந்ததுடன் இளங்கதிர் அணித்தலைவர்கள்
புஸ்பராஜ் கங்கைஅமரன்
மற்றும் இராமையா சத்தியமூர்த்தி ஆகியோரின் ஒருமித்த வேண்டுகோளுக்கிணங்க இணை
சாம்பியனாக வெற்றிக்கிண்ணங்களை தம் வசப்படுத்தின.

கோணக்கலை தமிழ் மகா வித்தியாலய அணியினர் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.

இறுதி போட்டியின் ஆட்டநாயகனாக கணேசன் நிமல்ராஜ் தெரிவாகியதுடன் தொடர் ஆட்டநாயகனாக விஜயகாந்த் (மானன்) தெரிவாகியமைக் குறிப்பிடத்தக்கது.

(நடராஜா மலர்வேந்தன்)

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com