...
செய்திகள்

கோதுமை மாவு தரமானதாக இல்லை: பேக்கரி பண்டங்களின் நிறைகளில் குளறுபடி

கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ள போதிலும் பாண் மற்றும் ஏனைய பேக்கரி பண்டங்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் தற்போது சந்தையில் கிடைக்கும் கோதுமை மாவைப் பயன்படுத்தி உணவுப் பண்டங்களைத் தயாரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய நிலையில் மாவைப் பயன்படுத்தி பாண் தயாரிக்கும் போது, ​​பாண் சரியான தரத்துக்கு பொங்கி வராமையால், மேற்பகுதி வெடித்து விடும் என்கிறார்கள்.இதனால் தமது உற்பத்தியின் வடிவத்திலும் சுவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், உற்பத்தி குறைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
சில பேக்கரி பண்டங்களின் விலை அதிகரித்துள்ள போதிலும் பாண் சரியான எடையில் இல்லை என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
ஒரு பாண் 450 கிராம் எடையுள்ளதாக இருக்க வேண்டும். ஆனால் புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள பாண் 332 கிராம். றோஸ் பாண் 90 கிராம் எடை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen