செய்திகள்

கோதுமை மா மீதான வரியை அரசாங்கம் 28 ரூபாவால் குறைத்துள்ளது…

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் கோதுமை மா மீது விதிக்கப்பட்டிருந்த 36 ரூபா வரி 8 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் ஒரு கிலோ கிராம் கோதுமை மா மீதான வரியை அரசாங்கம் 28 ரூபாவால் குறைத்துள்ளது.

நிதி அமைச்சர் ,பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கையெப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் டிசம்பர் 14 ஆம் திகதி முதல் கோதுமை மாவுக்கான புதிய வரி திருத்தம் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரி திருத்தங்களின் பின்னர் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் அதிகபட்ச சில்லறை விலை தொடர்பில் தற்போது மதிப்பிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையினரிடம் நாம் வினவிய போது தெரிவிக்கப்பட்டது

இதேவேளை எந்தவொரு வர்த்தகரும் கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கும் அதை போட்டி விலையில் விநியோகிப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

சந்தையில் அதிகரித்து வரும் அரிசி விலைக்கு மாற்றீடாக அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது

Related Articles

Back to top button