அரசியல்செய்திகள்

கோத்தாபயவை களமிறக்குவதாக நான் எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை – மஹிந்த

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் , முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதாக தான் எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு நேற்றுடன் 3 மாதங்கள் கடந்துள்ளதாகவம் அதற்கான தனது கவலையை தெரிவித்துக் கொள்வதாகவும் எதிர்க்கட்சி தலைவர் இதன்போது தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் இன்றும் வைத்தியசாலைகளில் உயிருக்க போராடிக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த தவறியுள்ளதாகவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது மற்றுமொருவர் அவ்வாறு இல்லை என தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Related Articles

Back to top button
image download