அரசியல்

கோத்தாவுக்கு எதிரான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நாளை காலை 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்‌ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக் கொள்ள கூடாதென கூறியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மனு கடந்த திங்கட்கிழமை  தாக்கல் செய்யப்பட்டதுடன் , இதற்காக மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டிருந்தது.

அதன்படி காமினி வியாங்கொட மற்றும் சந்திரகுப்த தேனுவர ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. 

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் ,  ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் , உள்நாட்டலுவல்கள் அமைச்சர் , மற்றும் அமைச்சின் செயலாளர் , எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ  , முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் தற்போதைய ஸ்ரிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஷபக்‌ஷ ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

அத்துடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஷபக்ஷவிற்கு இரட்டை பிரஜாவுரிமையை வழங்கும் வகையில் கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி தயாரிக்கப்பட்ட ஆவணம் போலியானது என தெரிவித்தும் இந்த மனு தாக்கல் செய்யப்ப்ட்டுள்ளது.

எனவே மனுவை விசாரணைக்கு எடுத்து தீர்ப்பு வழங்கும் வரை கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை பிரஜை என ஏற்றுக் கொள்ள கூடான கூறி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related Articles

Back to top button
image download