அரசியல்செய்திகள்

கோத்தா தொடர்பில் மஹிந்த இந்திய ஊடகத்துக்கு வழங்கியுள்ள தகவல்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அதிகமாக பேசுக்கூடியவர் அல்ல , எனினும் செயற்திறன் மிக்க தலைவர் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஷ குறித்து எதிர்கட்சிகள் பொய்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள போதிலும் அவர் மோசமானவரில்லை எனவும் எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மக்களே கோத்தபாய ராஜபக்சவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஏற்கனவே தீர்மானித்துவிட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தாபய ராஷபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்தால்  பிரதமராக அதிக அனுபவமுள்ள நான் அந்த பதவியில் நீடிப்பேன் எனவும் நாங்கள் அனைவரும் இணைந்து மக்களிற்கு என்ன தற்போது தேவையோ அதனை வழங்க முடியும் என மகிந்த ராஜபக்ச குறித்த செவ்வியில் கூறியுள்ளார்..

Related Articles

Back to top button
image download