செய்திகள்

கோப்பி யுகம் முடிவுக்கு வந்தது எப்படி?

இலங்கையில் முதன்முதலாக கோப்பி பயிரிடப்பட்ட இடத்தின் இன்றைய நிலை!

தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் எப்போது கண்டிசீமை வந்தனர்?

கோப்பி யுகம் முடிவுக்கு வந்தது எப்படி?

1815 ஆம் ஆண்டில் கண்டி இராஜ்ஜியத்தை பிரித்தானியர் கைப்பற்றிய பின்னர் – மலையகமெங்கும் வெள்ளையர்களின் ஆதிக்கம் கோலோச்சியது.

அரசியல், பொருளாதாரம், நிர்வாகம் என முப்பொறிமுறைகளும் அவர்களின் கட்டளைகளுக்கேற்பவே சுழன்றன.

பெருந்தோட்டத்துறைக்குள் கால்பதிப்பதற்கு முன்னர், வெள்ளையர்களுக்கு கோப்பி பயிர்செய்கையே பெரும் பொருளாதார பங்களிப்பை வழங்கியது எனலாம்.

1823 ஆம் ஆண்டு கோப்பி பயிர்செய்கைக்கான ஆய்வுகள் இடம்பெற்று, 1824 இல் இலங்கையில் முதலாவதாக கோப்பி பயிர்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்திலுள்ள, கம்பளை நகரில் – சிங்ஹாபிட்டிய எனும் பகுதியிலேயே ஹன்ரி பேர்ட், ஜோர்ஜ் பேர்ட ஆகிய சகோதரர்களால் கோப்பி பயிரிடப்பட்டுள்ளது.

அதன்பின்னர் ஏனையப் பகுதிகளிலும் பயிரிடப்பட்டது. கோப்பி தோட்டங்களில் வேலை செய்வதற்காக 1825 ஆம் ஆண்டு முதல் தென்னிந்தியாவிலிருந்து மக்கள் வர தொடங்கினர். 1954 ஆம் ஆண்டுவரை கோப்பியே பிரதான ஏற்றுமதி பொருளாக விளங்கியது.

சனத் சுந்தர்

Related Articles

Back to top button