செய்திகள்

கோர விபத்து : இளைஞர் பரிதாபமாக பலி

அநுராதபுரம் – தம்புளை பிரதான வீதியின் குருந்துகுளம், கீரியகஸ் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 21 வயது இளைஞரொருவர் பலியாகியுள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று வேன் ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் படுகாயமடைந்த இளைஞன் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வேன் ஓட்டுனரின் கவனயீனத்தால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது

இவ்விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

31 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button