ஆன்மீகம்செய்திகள்நுவரெலியா

கோலாகலமாக ஆரம்பித்த பொகவந்தலாவை தொழிற்சாலை கீழ்ப்பிரிவு தோட்ட முத்துமாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா..

கோலாகலமாக ஆரம்பித்த பொகவந்தலாவை தொழிற்சாலை கீழ்ப்பிரிவு தோட்ட முத்துமாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா

இயற்கை எழில் மிக்க மத்திய மலைநாட்டின் பொகவந்தலாவை தொழிற்சாலை கீழ்ப்பிரிவில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர்த்தோற்சவ நிகழ்வுகள் மிகக் கோலாகலமாக மலையகம் FM, மலையகம்,lk ஊடகப்பங்களிப்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

அந்தவகையில் இன்றைய தினம் பால்குட பவனி, பறவைக்காவடி என்பன பொகவந்தலாவை தொழிற்சாலை தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை நோக்கி வந்தடைந்தது.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

அத்துடன் எமது தமிழர் பாரம்பரிய கலை நிகழ்வுகளை பறைசாற்றும் வண்ணம், பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது. குறிப்பாக காவடியாட்டம், கோலாட்டம், தப்பு அடித்தல், பொம்மலாட்டம் என்பன சென்.றேகுலர்ஸ் தோட்ட கலைஞர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அக்கலை நிகழ்வுகள் அனைவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் மிகவும் நேர்த்தியாக இடம்பெற்றிருந்தது. ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் சூழ இந்நிகழ்வுகள் நடைபாதையாக ஆலயத்தை வந்தடைந்தது.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

இந்நிகழ்வுகளை உலகெங்கும் வாழ் நம் தமிழ் சொந்தங்கள் காணும் முகமாக, மலையகம் FM மற்றும் மலையகம்.lk இணையத்தளம் FaceBook Live இன் ஊடாக நேரலையாக காணும் வாய்ப்பினை வழங்கி இருந்தது.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

அத்துடன் தொடர்ந்து அங்கு ஆலயத்தில் இடம்பெறும் அத்தனை நிகழ்வுகளையும் உங்களுக்கு நேரலையாக வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

நாளைய தினம் தேர்த்திருவிழா நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

புகைப்படங்கள் உதவி: சுரேஷ்குமார் கந்தசாமி

[siteorigin_widget class=”WP_Widget_Custom_HTML”][/siteorigin_widget]

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com