கல்விசமூகம்செய்திகள்

கோலாகலமாக இடம்பெற்ற சிறகுகள் புத்தகத் திருவிழா

அனைத்துலக புத்தக தினத்தினை முன்னிட்டு சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் புத்தகத் திருவிழா ஏப்ரல் 29 முதல் மே 2ஆம் திகதி வரை சிறப்பான முறையில் கோண்டாவிலில் அமைந்துள்ள எழுதிரள் பணிமனையில் இடம்பெற்றது. ஈழத்து எழுத்தாளர்கள் மற்றும் அயல்நாட்டு எழுத்தாளர்களின் 800க்கு மேற்பட்ட தலைப்புகளிலான நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமையுடன், வாசகர்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்திருந்தனர். ஏப்ரல் 29ஆம் திகதி இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் திரு.கண்பதி சர்வனந்தா(ஆசிரியர் – அறிந்திரன்) திரு.ஜோதிலிங்கம் ( அரசியல் ஆய்வாளர்) ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டனர். தொடர்ந்து 30, மே 1ஆம் திகதிகளில் சிறுவர்களுக்கான கடதாசி வேலைப்பாடுகள் (ஓரிகாமி) பயிற்சி மற்றும் கதை சொல்லல் நிகழ்வுகள்; திரு.செ.மகேஸ் (முன்னாள், உதவிக் கல்வி பணிப்பாளர் – வடகிழக்கு மாகாணம்) மற்றும் திரு.றொபின்சன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்வில் சிறுவர்களுக்கான சித்திரம் வரைவதற்கான பகுதி அனைவரினதும் கவனத்தினையும் ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button